வெள்ளையாம்பட்டு கிராமத்தின் இயற்கை எழில் சூழ்ந்த பாறைகளின் நடுவில் ஒரு வேப்பமரத்தின் அடியில் துர்க்கை அம்மன் சிற்பம் காணப்படுகிறது. இச்சிற்பம் மற்ற துர்க்கை சிற்பங்களை விட மிகவும் வித்தியாசமான முறையில் காணப்படுகிறது
துர்க்கை தனக்கான ஆயுதங்களை கரங்களில் ஏந்தி இருக்கிறாள். தலைக்குமேலே சித்திரமேழி போன்ற (ஏர் கலப்பை) குறியீடு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிற்பம் பற்றி பல தகவல்களை வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் பொதுமக்கள் மற்றும் நம்மிடம் பகிர ஆரம்பித்தார்
துர்க்கையின் சிற்பத்தில் சித்திரமேழி போன்ற குறியீடு இடம் பெற்றிருக்கும் சிற்பம் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது தான் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு அரிய சிற்பமாகும்
இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் அனந்தபுரம் கோ.கிருஷ்ணமூர்த்தி உறுதிப்படுத்தி இருக்கிறார் எனவும் இச்சிற்பம் பல்லவர் காலத்தைச் (கி.பி.8-9 நூற்றாண்டு) சேர்ந்ததாகும் செங்குட்டுவன் கூறினார்
மேலும் துர்க்கை சிற்பத்தின் முழுங்காலுக்குக் கீழே சிதைக்கபட்டிருக்கிறது. இதனால் சிற்பத்தின் முழுமையான அமைப்பை கண்டறிய இயலவில்லை எனவும் இந்த அரிய சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என அக்கிராம அறிவுரை வழங்கினார்
மேலும் அதே பகுதியின் பக்கத்தில் ஏரிக்கரைக்கு அருகில் பெரிய பாறையில் புடைப்புச் சிற்பமாக வேட்டனார் அல்லது வேட்டையனார் என அழைக்கப்படும் ஒரு புடைப்பு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது
தலையில் அள்ளி முடிக்கப்பட்டக் கொண்டையுடன் காட்சியளிக்கும் வீரன் தனது கரங்களில் நீண்ட ஈட்டியைத் தாங்கி சண்டையிடுவது போல் நிற்கிறான். அவனதுக் கால்கள் விரைந்து செல்வது போல் காட்டப்பட்டுள்ளன
இச்சிற்பம் நாயக்கர் காலத்தைச் (கி.பி.15-16ம் நூற்றாண்டு) சேர்ந்தது எனவும் வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்