ஆண்டுதோறும் கோவைமத்தியசிறை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறுகிறது.
நகரின் மையப் பகுதியில் இந்த பொருட்காட்சி அமைக்கப்படுவது நகர எல்லைக்குள் வாழும் மக்கள் மட்டுமே வந்து செல்ல ஏதுவாக உள்ளது.
இந்த நிலையில் ஊரகப்பகுதி மக்களும் பொருட்காட்சிக்கு சென்று மகிழும் விதமாக துடியலூர் பகுதியில் உள்ள
விஜி மருத்துவமனை எதிரே தனியா நிறுவனம் சார்பில் டிஸ்னிலேண்ட் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது
இந்த கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
இந்த டிஸ்னிலேண்ட் பொருட்காட்சியில் தத்ரூபமான சிலைகள், போட்டோஸ்பாட், 20 அடி உயரமுள்ள டைட்டானிக் கப்பல் மாதிரி, குழந்தைகள் விளையாட ஏற்ற இடங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன
மேலும் உணவுப்பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது.
குழந்தைகளை கவரும் விதமாக இந்த டிஸ்னிலேண்ட் பொருட்காட்சியின் நுழைவு வாயிலிலேயே பிரம்மாண்ட தோற்றமுடைய கிங்காங் குரங்கு பொம்மை வைக்கப்பட்டுள்ளது