ஹெலிகாப்டர் வெடி, பேப்பர் பாம்...  நெல்லைக்கு வந்த வெரைட்டியான வெடிகள்.!

தீபாவளி என்றாலே பட்டாசு தான். தீபாவளியையொட்டி ஆண்டு தோறும் புதிய வடிவம் மற்றும் வண்ணங்களில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை பைபாஸ் ரோட்டில் உள்ள கடைகளில் புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன

குறிப்பாக டின் பீர் பாம், ஹெலிகேம் வெடி, ஹெலிகாப்டர் வெடி, ஒரு கிலோ அடியால் பேப்பர் பாம் உள்ளிட்ட புதிய ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன

அதேபோல் மயில் தோகை, வானவில் என பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

பாரம்பரிய ஓலை வடிவிலான பட்டாசு மற்றும் சிறுவர்களுக்கு ரிவால்வர், ஏ.கே.47 என துப்பாக்கிகளிலும் புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன

மேலும் வழக்கமான புஸ் வானம், தரைச் சக்கரம், கம்பி மத்தாப்பு ஆகியவையும் புதிய வண்ணம் மற்றும் வடிவங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது

Stories

More

கம்மி விலையில் ஸ்வெட்டர் வேணுமா..? விழுப்புரம் இந்த பகுதிக்கு போங்க...!

முத்தத்தில் உருவான கமல் ஓவியம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல இதுதான் நல்ல டைம்..

நகர் பகுதியான பாளையங்கோட்டை ஜங்ஷன் டவுன் மற்றும் புறநகர் பகுதியான சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், மானூர், திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பட்டாசுகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்

பட்டாசுகளின் விலையானது 500 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது

விருதுநகரில் ஐஸ்கிரீம் தோசை எங்கே கிடைக்கும் தெரியுமா.?