இரவு தூங்க செல்லும் முன் இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்..!

இரவு தூங்க செல்லும் முன் இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்..!

வெள்ளரிக்காய்

வெள்ளரிகள் கக்கூர்பிட்டாசின் எனப்படும் ஒரு தனிமம் (Element) நிரம்பியுள்ளது. இது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தி நல்ல இரவு தூக்கத்தில் குறுக்கிட்டு நிம்தியான தூக்கத்தை கெடுக்கிறது.

காஃபி

காஃபின் அடங்கிய பானங்களை பருகுவதால் ஒருவர் சுமார் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை விழித்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே மாலை நேரங்களில் குடிக்கும் காஃபி தவிர்த்து இரவு உணவிற்கு முன் அல்லது பின் காஃபி குடிப்பதால் உங்கள் தூக்கத்தை இழக்க நேரிடும்.

சாக்லேட்

சாக்லேட்டுகளில்சர்க்கரை மற்றும் கலோரிகள் மட்டுமின்றி காஃபினும் ஒரு மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. ஏற்கனவே நாம் பார்த்தபடி காஃபினை இரவில் எடுத்து கொள்வது தூக்கத்தை கெடுக்கும் என்பதால் சாக்லேட்டை தவிர்ப்பது நல்லது.

ரெட் ஒயின்

தூங்க செல்லும் முன் ரெட் ஒயின் போன்றவற்றை குடித்தால், உடலின் சில பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. இதனால் தூங்கும் போது கூட உங்கள் உடல் ஓய்வெடுக்கும் நிலையில் இருக்காது. இதனால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது.

உலர் பழங்கள்

இரவு நேரத்தில் உலர் பழங்களை சாப்பிடுவது உங்கள் தூக்கத்திற்கு நல்லதல்ல. ஏனென்றால் அவற்றில் உள்ள அதிக நார்ச்சத்து, குறைந்த நீர் சத்து உள்ளிட்டவை செரிமான ஆரோக்கியத்தை பாதிக்க கூடும். எனவே உங்களது அமைதியான தூக்கத்தை தடுக்கும் வாய்ப்பு உள்ளது.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?