ஃப்ரிட்ஜூக்குள் இந்த உணவுப்பொருட்களை வைக்கவே வைக்காதீங்க.!

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதால்  பூஞ்சைத் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும்  அதனுடைய சுவை ,ஜூஸினஸ் ககுறையலாம் 

தக்காளி

1

ஈரப்பதம் வெங்காயத்தில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும். வெங்காயத்தை வெளியில் தான் வைக்கவேண்டும்.

வெங்காயம்

2

தேனின் மென்மையான மற்றும் திரவ அமைப்பு மாறாமல் இருக்கவும், கெட்டியாகாமல் தடுக்கவும் அதனை அறை வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது.

தேன்

3

ஃப்ரிட்ஜ் உள்ளே பிரெட்டை வைப்பதால் அவை காய்ந்தும், கடினமாக மாறியும் பயன்படுத்த முடியாத நிலையை அடையும்.

பிரெட்

4

ஃப்ரிட்ஜில் வைக்கும் போது உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து தனியே பிரிவதுடன், அது கெட்டியாகவும், இனிப்பு சுவை உடையதாகவும் மாறுகிறது. இதனை தடுக்க அறை வெப்பநிலையெலேயே பேப்பர் பேக்கில் சுற்றி வைக்கலாம்.

உருளைக்கிழங்கு

5

பூண்டை ஃப்ரிட்ஜினுள் வைப்பதால் ரப்பர் போன்ற தன்மையை பெறுகிறது.

பூண்டு

6

வாழைப்பழம் பழுப்பதற்கு அறை வெப்பநிலை தேவை. அதனால் அதனை ஃப்ரிட்ஜினுள் வைப்பதன் மூலம் வாழைப்பழத் தோல் கருப்பது மட்டுமல்லாது பழுப்பதற்கு அதிக நாட்கள் எடுக்கும்.

வாழைப்பழம்

7

நறுக்கிய வெள்ளரிக்காயை வைப்பதனால் வெள்ளரிக்காயில் உள்ள நீரினால் மொறுமொறுப்பு தன்மை நீங்கி தொய்வாகிவிடும். மேலும் வெள்ளரியில் உள்ள விதைகள் விழுந்து ஓட்டைகள் விழ ஆரம்பிக்கும்.

வெள்ளரிக்காய் 

8

ஃப்ரெஷாக வாங்கிய ஆப்பிளை வெளியில் வைத்தாலே குறைந்தது இரண்டு வாரங்களுக்கு கெடாமல் இருக்கும் தன்மையுடையது. அப்படி இருக்கையில் அதை ஃப்ரிட்ஜினுள் வைக்கவேண்டும் என்ற அவசியமே கிடையாது.

ஆப்பிள்

9

உண்மையான சுவை மற்றும் மணம் நீங்கிவிடும். மேலும் காபிக்கு அருகில் இருக்கும் பொருட்களின் மணத்தை எடுத்துக்கக்கூடிய பண்பு இருப்பதனால் காபியின் உண்மையான மணம் மாறும் வாய்ப்பு அதிகம். எனவே, அவற்றை அறை வெப்பநிலையில் ஒரு ஏர் டைட் கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன்படுத்துவதே சிறந்த முறையாகும்.

10

காபித் தூள்

மதிய உணவில் நீங்கள் சாப்பிடக்கூடாத 7 உணவுகள்.!