அகல் விளக்குகள் ரெடியாக எவ்வளவு டைம் ஆகும் என தெரியுமா.?

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும் கார்த்திகை தீபத்திருநாள். இந்த நன்னாளில் வீடுகளில் விளக்கேற்றினால் துன்பம் எனும் இருள் நீக்கப்பட்டு மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்

முக்கியமாக கோவில்களில் இந்த நன்நாளில் பல விஷேச நிகழ்வுகள் நடக்கும். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருநாள் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது

இந்நிலையில் காலம் காலமாக மண்பான்ட தொழில் செய்து வரும் தஞ்சை குயவர் தெருவைசேர்ந்த பண்பாண்ட கலைஞர்கள் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

ஒரு முக அகல்விளக்குகள், 5 முக விளக்குகள், 7-முக விளக்குகள், 9-முக விளக்குகள் அளவுக்கேற்ப ரூ.1 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன

அதே போல விருத்தாச்சலம் பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் அச்சு விளக்குகள், பீங்கான் விளக்குகளும் அதிகளவில் விற்பனையாகின்றன

குறிப்பாக தேங்காய் வடிவ விளக்கு ஜோடி ரூ.80 முதல் ரூ.100-க்கும். பாவை விளக்குகள் ஜோடி ரூ.100 முதல் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன

Stories

More

தண்ணீரால் சூழ்ந்த  கிராமம்...!

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

கடந்தாண்டை விட இந்த ஆண்டு விளக்குகள் அதிக அளவில் விற்பனையாகும் என மண்பாண்ட கலைஞர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்

ஏற்கனவே தஞ்சையில் அவ்வப்போது பெய்த மழையால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வரும் நாட்களில்மழை பெய்தால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் மண்பாண்ட கலைஞர்கள் தெரிவித்தனர்

விழுப்புரத்தில் தயாராகி உள்ள பல வண்ண அகல் விளக்குகள்.!