முத்துக்கள் ஒரிஜினலா என்று எப்படி பார்த்து வாங்கனும் தெரியுமா.?

ராமநாதபுரம் மாவட்டமானது நீண்ட கடற்கரை உடைய பகுதியாக இருப்பதால் தான் கடல் சார்ந்த தொழில்கள் அதிகம் நடைபெறுகிறது

மீன்பிடித்தல், கடல்பாசி வளர்ப்பு, சிப்பி சேகரித்தல், முத்துக்குளித்தல் போன்ற தொழில்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

கடலில் இருந்து எடுக்கப்படும் சங்கு, சிப்பி, முத்து, போன்ற பொருட்கள் வைத்து கைவினை பொருள்கள் மூலம் அலங்காரம் பொருட்கள் மாலைகள் செய்து உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது

இதில் தனுஷ்கோடியில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடைகள் அமைத்து சிப்பி, முத்து, சங்கு, பவளம் போன்ற அணிகலன்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் வைத்து கடைகள் நடத்தி வருகின்றனர்

முத்துக்கள் மற்றும் முத்துமாலைகள் ஒர்ஜினலா என பார்த்து வாங்குவது குறித்து விளக்கம் அளிக்கிறார் தனுஷ்கோடியில் கடை நடத்தும் சந்தனமாரி

முத்து என்பது சிப்பிக்குள் இருந்து வளர்ந்து உருவாகிறது. சிப்பியினை கடலுக்குள் இருந்து எடுத்து சுத்தம் செய்து முத்து எடுக்கப்படுகிறது

இதனை ஒரிஜினல் என்று கண்டறிய முகம் பார்க்கும் கண்ணாடியின் மேல் தண்ணீர் ஊற்றி அல்லது வெறும் கண்ணாடியில் கூட முத்துவை வைத்து தேய்த்து பவுடர் போன்று வந்தால் ஒரிஜினல் முத்து ஆகும்

டூப்ளிகேட் முத்து என்பது கண்ணாடியில் இருந்து செய்யப்படுகிறது. இதனை கண்ணாடியில் உரசினால் பவுடர் போன்று வராது

முத்துக்கள் மற்றும் முத்துமாலைகள் வாங்கும் போது இந்த முறையினை மறக்காமல் செய்து பார்த்து ஏமாறாமல் பயனடைந்து கொள்ளுங்கள்

next

இயற்கையாகவே கொலஸ்ட்ராலை விரைவாக குறைக்க உதவும் 5 பழங்கள்.!