பூண்டு சமைப்பதற்கான 10 நிமிட விதி என்ன என்று உங்களுக்கு தெரியுமா.?

பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பூண்டு ஒரு முக்கிய உணவு பொருளாக உள்ளது. இது உணவின் சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது

சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் பூண்டின் நன்மைகள் புகழ்பெற்றவை

பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, இது பூண்டை மாறுவேடத்தில் மருந்தாக மாற்றுகிறது

இருப்பினும், வல்லுநர்கள் எச்சரித்தபடி, “வாணலியில் பூண்டை இரண்டு நிமிடங்கள் வறுத்தால் கூட அதன் அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் அழித்துவிடும்

ஒரு எளிய மாற்றத்தை செய்வதன் மூலம் பூண்டின் அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் நாம் மாற்றியமைக்கலாம் என்று டாக்டர் மூமல் ஆசிஃப் கூறினார்

அதன்படி பூண்டை நசுக்கி அல்லது நறுக்கி 10 நிமிடங்களுக்கு வெப்பத்திலிருந்து விலக்கி வைக்கவேண்டும்

More Stories.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புளித்த உணவுகள்...

ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மசாலாக்கள்.!

முகலாய சுவையில் பூண்டு பாயசம்.. ரெசிபி...

இந்த நேரத்தில் அதிகபட்ச அல்லிசின் உருவாக்கப்பட்டு, சமைக்கும் போது அப்படியே இருக்கும் என்று டாக்டர் கரிமா கூறினார்

10 நிமிடங்களுக்குப் பிறகு பூண்டை வறுக்கவோ, சுடவோ, வதக்கவோ அல்லது சமையலில் சேர்த்துக்கொள்வதினால்  அதன் அனைத்து மருத்துவ நன்மைகளையும் நாம் பெறலாம்

சேனைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!