அந்த கதையின் பாதிப்பில் அரு.ராமனாதனும், ஏஎஸ்ஏ சாமியும் 'தங்கப்பதுமை' கதையை எழுதினர்
அதன் ஸ்கெலிட்டல் வடிவம் அப்படியே கண்ணகி படத்தை கொண்டிருந்தது. ஆனால், கதை வேறு
கோவலனை பிரதிபலிக்கும் மணிவண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனும், கண்ணகியை பிரதிபலிக்கும் செல்வி என்ற வேடத்தில் பத்மினியும் நடித்தன
மாதவிக்காக மாய மோகினி என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. கொல்லும் விழியாள் என்று வர்ணிக்கப்படும் டி.ஆர்.ராஜகுமாரி மாய மோகினியாக நடித்தார்
அவரே அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தம் என்று சொல்லும் அளவுக்கு மாய மோகினியை தனது நடிப்பால் உயிர்பெறச் செய்தார்
மணிவண்ணன் சிவாஜிக்கு நிகராக பத்மினியின் செல்வி கதாபாத்திரம் படைக்கப்பட்டிருந்தது
படப்பிடிப்பு இடைவேளையில் ஓய்வு எடுக்காமல் பத்மினி வசனங்களைப் படித்து மனப்பாடம் செய்து நடித்தார்
நாயகன், நாயகி இருவருக்கும் சம வாய்ப்பு என்பதால் சிவாஜிக்கு அளித்த ₹60000 சம்பளம் அப்படியே பத்மினிக்கும் வழங்கப்பட்டது
6 வது தேசிய திரைப்பட விழாவில் தமிழின் சிறந்தப் படத்துக்கான இரண்டாவது பரிசை 'தங்கப்பதுமை' பெற்றது
யார் இந்த சோபிதா துலிபாலா.? சொத்து மதிப்பு, கல்வித் தகுதி மற்றும் பல…