2000 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட மணி.. திருப்பூரில் உள்ள இந்த தேவாலயத்தின் சிறப்புகள் தெரியுமா.?

திருப்பூர் கோர்ட் வீதி பகுதியில் அமைந்துள்ள தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபை தேவாலயம் 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது

1876ம் ஆண்டு ஸ்வீடனில் இருந்து வந்த மிஷனரி அமைப்பினர் திருப்பூரில் தொடக்கப்பள்ளியை அமைத்தனர்.அப்போதைய காலகட்டத்தில் தனியாக தேவாலயம் இல்லாததால் பள்ளியிலேயே பிரார்த்தனைகள் செய்யப்பட்டது

1912ம் ஆண்டு ஓடுகளால் செய்யப்பட்ட பள்ளி உடன் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த பள்ளி தற்போது வரையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்ற பலரும் பெரும் பதவிகளில் அங்கம் வகித்தனர்

அப்போதைய நிலையில் மற்ற பகுதிகளில் தேவாலயம் இல்லாததால் இந்த தேவாலயத்திலேயே அனைத்து தரப்பினரும் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். இந்த தேவாலயம் கட்டப்பட்டு வந்த சமயத்தில் முதலாம் உலகப் போர் நிறைவடைந்தது

இந்த போரின் வெற்றியை பறைசாற்றும் விதமாக ஸ்வீடன் நாட்டினர் பயன்படுத்திய நாணயங்கள் மற்றும் தங்கள் நாட்டில் இருந்த மணியை கொண்டு 2000 கிலோ எடை கொண்ட மணியை உருவாக்கினர்

இதனை தமிழகத்தில் கட்டப்படும் புதிய தேவாலயத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்போது கட்டப்பட்டு வந்த இந்த தேவாலயத்தில் 2000 கிலோ எடை கொண்ட மணியை பொருத்தினர்

சிறப்பு வாய்ந்த இந்த மணி தமிழகத்தின் இரண்டாவது பெரிய மணியாக இன்றளவும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு தேவாலயத்தை இடித்து புணரமைத்து பிரம்மாண்டமாக கட்டமைக்கும் பணிகள் துவங்கியது

12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. 

தேவாலய பணிகள் நிறைவடைந்து 110 அடி உயர கோபுரத்தில் மணியை பொருத்தும்போது தேவாலயம் கம்பீரமாக தோற்றம் அளிக்கும்.

பாளையங்கோட்டை உச்சினி மாகாளி அம்பாள் தல வரலாறு பற்றி தெரியுமா.?