விருதுநகரில் ஐஸ்கிரீம் தோசை எங்கே கிடைக்கும் தெரியுமா.?

இன்று பலரது இரவு நேர பிரதான உணவாக இருப்பது தோசை தான். அப்படி பட்ட தோசையில் நெய் தோசை, ரவா தோசை, முட்டை தோசை என பல வகைகளை கேள்வி பட்டிருப்போம், சுவைத்தும் பார்த்திருப்போம்

அந்த வரிசையில் குழந்தைகளை கவரும் வகையில் விருதுநகரில் உள்ள குட்டியம்மா தோசைக்கடையில் ஐஸ்கிரீம் தோசை செய்து அசத்தி வருகின்றனர்

ஐஸ் கிரீம்ல தோசையா.? தோசை சூடானது ஐஸ்கிரீம் குளிர்ச்சியானது இது எப்படி சாத்தியம் என சிந்தித்து பார்த்து, சரி அந்த தோசை எப்படி தயார் செய்யப்படுகிறது என பார்த்த போது, தோசையை சாதரணமாக கல்லில் ஊற்றி எடுத்து

அதன் மீது ஐஸ்கிரீம் வைத்து உருக வைத்து, மீண்டும் அதன் மீது ஐஸ்கிரீம் வைத்து சாக்லேட் ஊற்றி நாட்ஸ்களை தூவி அலங்காரம் செய்து ஐஸ்கிரீம் தோசை என தருகின்றனர்

இது பற்றி பேசிய குட்டியம்மா தோசைகடை உரிமையாளர் ரவிக்குமார், குழந்தைகளை கவர தான் இந்த ஐஸ்கிரீம் தோசையை இங்கு தயார் செய்து வருவதாகவும், பெயர் மற்றும் சுவை தனித்துவமாக இருப்பதால் குழந்தைகள் இதை அதிகம் விரும்புவதாக தெரிவித்தார்

Stories

More

மூன்றாவது முறையாக செந்நிறமாக மாறிய புதுவை கடல்..

முத்தத்தில் உருவான கமல் ஓவியம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல இதுதான் நல்ல டைம்..

மேலும் குடும்பமாக சாப்பிட வருபவர்கள் கூட மற்ற தோசை வகைகளை சாப்பிட்டு விட்டு கடைசியில் இனிப்பு சாப்பிட வேண்டும் என ஐஸ்கிரீம் தோசையை வாங்கி சாப்பிடுவதாக தெரிவித்தார்

மூன்றாவது முறையாக செந்நிறமாக மாறிய புதுவை கடல்.!