இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் இவர் தான்..

ஒரு படத்திற்கு ரூ.200 கோடியா.!

இந்திய சினிமாவில் ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் உள்ளனர். அவர்களில் சிலர் தனித்துவமான கதாப்பாத்திரங்களில் நடிப்பதில் திறமை வாய்ந்தவர்கள்

அதாவது குணசித்திர கதாப்பாத்திரம், துணை கதாப்பாத்திரம், வில்லன் கதாப்பாத்திரம் உள்ளிட்டவை. இதிலும் குறிப்பாக வில்லன் கதாப்பாத்திரத்திற்கு எப்பொழுதுமே தனி எதிர்ப்பார்ப்பு உண்டு

வில்லன் கதாப்பாத்திரம் முறையாக அமையாவிட்டால் அது திரைப்படத்தின் கருவை பாதிக்கும். அந்த வகையில் பார்த்தாலே நடுக்க கூடிய தோற்றம் கொண்ட பல வில்லன் நடிகர்கள் உள்ளனர்

அவர்களின் சிலருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளன. வில்லன்கள் மட்டுமன்றி ஹீரோக்களும் வில்லனாக நடிக்க தொடங்கி விட்டனர். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

அந்த வகையில் இந்திய சினிமாவில் வில்லனாக நடிக்கும் நடிகருக்கு ஒரு திரைப்படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது

அதன்படி வில்லன் கதாப்பாத்திறத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அவர் திகழ்கிறார்

இந்த தகவலை அறிந்தவுடன் அது யார் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஓட தொடங்கிவிடும். அது வேறு யாருமில்லை நடிகர் யாஷ் தான்

கன்னட நடிகரான இவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு

யாஷ் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் அவர் மிகவும் பிரபலமடைந்தார்

கேஜிஎஃப் 1 மற்றும் 2 திரைப்படங்களுக்கு பிறகு யாஷின் மார்கெட் அதிகரிக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க தொடங்கினார் யாஷ்

இந்நிலையில் நித்தேஷ் திவாரியின் “ராமயணம்” திரைப்படத்தில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்

ரன்பீர் சிங் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

ராமயாணம் திரைப்படத்தில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நிலையில், இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகராக யாஷ் உருவெடுத்துள்ளார்

இந்த திரைப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ.200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

next

கவின் – நயன்தாரா இணைந்துள்ள படத்தின் கதை இதுதான்.!