நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் பிக் FM இல் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்தார்
அங்கு அவர் நடத்திய ‘க்ராஸ் டாக்’ ஷோ மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்று பிரபலமானார். அவரின் இடைவிடாத கலகப்பான கவுன்டர் பேச்சு மக்களை ஈர்த்தது
அதன் பின், 'நானும் ரௌடிதான்' போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு ரசிகர்கள் மேலும் குவிந்தனர்
அதன் பின் எல்.கே.ஜி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோவாக அறிமுகமானார் பாலாஜி
மேலும், தனியார் தொலைக்காட்சியில் தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுத்து வந்த அவர், அவரது வசீகரமான நகைச்சுவை பேச்சினால் மக்களை ஈர்த்தார்
பின்னர், 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் களமிறங்கினார் ஆர்ஜே பாலாஜி
நயன்தாரா, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவான இந்த படம் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் வரவேற்பை பெற்றது
முக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு முன் கதையை கேட்டு ஓகே சொன்ன பிரபல நடிகை குறித்து பேசியுள்ளார் ஆர்ஜே பாலாஜி
அவர் கூறுகையில், “மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அல்லது அனுஷ்கா இவர்களில் யாராவது ஒருவரை தான் நடிக்க வைக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்
ஸ்ருதி ஹாசன் எனக்கு நல்ல நண்பர் அவர் ஒரு நாள் எதிர்ச்சியாக போன் செய்து பேசினார். அப்போது படத்தின் கதையை அவரிடம் கூறினேன்
உடனே அவர் கதை நல்லாயிருக்கு நான் நடிக்கிறேன் என்று கூறினார். நானும் கதை சொன்ன முதல் ஹீரோயின் ஓகே சொல்லிட்டாங்க , இவங்கதான் என்று முடிவெடுத்துவிட்டேன்
அதன் பின் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணியின்போது, விக்னேஷ் சிவன் என்னிடம் நயந்தாராவிடம் இந்த கதையை சொல்றியா என்று கேட்டார்
நானும் வீட்டிற்கு சென்று நயனிடம் முதல் பாதியை சொல்லும் போதே அவர் ஓகே நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார்
அதன் பின் நான் ஸ்ருதி ஹாசனிடம் நயன்தாரா பண்றாங்க என்று கூறினேன், படத்திலும் அவரே மூக்குத்தி அம்மனாக நடித்தார் என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஆர்ஜே பாலாஜி கூறினார்
இயக்குனராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்.. ஹீரோ யார் தெரியுமா.?