கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் மனித வாழ்விற்கு மிகவும் அவசியமானது என்பதனை உணர்த்தும் விதத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று பெண் தெய்வங்களை போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தான் நவராத்திரி
ஒன்பது நாட்கள் இரவு அம்பாளுக்கு அலங்காரம் செய்து நைய்வேத்தியம் படைத்து பாடல் பாடி வழிபாடு செய்வார்கள்
கொலுப்படிகள் ஒற்றைப்படையில் எண்ணில் இருக்க வேண்டும். விநாயகர், சரஸ்வதி, லட்சுமியில் தொடங்கி சிவன் பார்வதி, அஷ்டலட்சுமிகள்,
தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் வரை மேலிருந்து கீழாக கொலு படிகளை அடுக்க வேண்டும்.
ஒன்றிலிருந்து பதினொரு வரை அல்லது அதற்கும் மேலாக ஒற்றைப்படை எண்ணில் கொலுபடிகள் இருக்க வேண்டும்
அம்மனுக்கு மிகவும் பிடித்தது இனிப்பு. இனிப்பு வகைகளில் சர்க்கரை பொங்கல், கற்கண்டு சாதம் போன்றவற்றை நெய்வேத்தியமாக அம்மனுக்கு படைக்கலாம்
புரட்டாசி மாதம் குளிர் காலம் என்பதால் பயிர் வகைகள் அதிகம் சேமித்து வைக்க முடியும். அதனால் சுண்டல் பயிறு வகைகளை அம்மனுக்கு நைய்வேத்தியமாக படைப்பது வழக்கம்