மாடுகளை சாலையில் விடாதீர்கள்... ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய தொண்டு நிறுவனம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுகிறது

பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமத்துவம் தொண்டு நிறுவனம் சார்பாக ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

விழுப்புரம் மாவட்டத்தில் 12 வருடமாக சமத்துவ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரான ரவி பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாவே சாலையில் சுற்றித் திரியும்கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுகிறது. சில சமயங்களில் உயிர் சேதம் கூட ஏற்படும் நிலை உருவாகி வருகிறது

இதனை தடுக்கும் பொருட்டு நகராட்சி நிர்வாகம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில், சமத்துவ தொண்டு நிறுவனம் மூலம் விழுப்புரத்தில் முக்கிய சாலைகளில் ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது

மேலும் பொது மக்களுக்கு கால்நடைகள் சாலையில் செல்வதால் எவ்வளவு ஆபத்துகள் ஏற்படுகிறது என்பது குறித்து துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

இது குறித்து ரவி பேசுகையில், நாம் வளர்க்கும் ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் நாய்கள் போன்ற வீட்டு விலங்குகளால் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் உரிமையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்

Stories

More

சிதைந்த நிலையில் அழிவை நோக்கி அரண்மனை மாளிகை ...

மதுரையில மினி டிரக்கிங் போகணுமா...!

நெல்லை ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அழகிய சாய்பாபா கோயில்

இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கிறது என்பதால் அதன் உரிமையாளர்கள் தங்களுடைய கால்நடைகளை சாலைகளில் திரியாமல்பார்த்துக் கொள்ள வேண்டும் எனதொண்டு நிறுவன தலைவர் ரவி கூறினார்

200 ரூபாயில் ட்ரக்கிங் போகலாம்… விருதுநகரில் ஒளிஞ்சு இருக்க மினி குற்றாலம்.!