நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உலர் பழங்கள்!

சில உலர் பழங்களில் இயற்கையாகவே அதிக சர்க்கரை உள்ளடக்கத்தை கொண்டிருப்பதால் நீரிழிவு நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அப்படி நீரிழிவு நோய் இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உலர் பழங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேரீச்சம்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம் உள்ளது, மேலும் அவை இரத்த குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம், இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது அல்ல.

பேரீச்சம்பழம்

1

சர்க்கரை மற்றும் கலோரிகள் நிறைந்தது உலர் திராட்சை. இது அதிக அளவில் உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.

உலர் திராட்சை

2

உலர்ந்த மாம்பழத்தில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இது இரத்த சர்க்கரை அளவை கணிசமாக பாதிக்கும்.

உலர்ந்த மாம்பழம்

3

உலர்ந்த அத்திப்பழங்கள் இயற்கையாகவே அதிக சர்க்கரையை கொண்டுள்ளது. எனவே இரத்த குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும்.

உலர்ந்த அத்தி

4

உலர்ந்த அன்னாசிப்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேடின் அளவு அதிகமாக இருக்கிறது. இது நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவின் கட்டுப்பாட்டை பாதிக்கிறது.

உலர் அன்னாசிப்பழம்

5

 இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்

பொறுப்புத் துறப்பு:

next

முட்டையுடன் இந்த 7 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.!