தொடர் மழையால் தாமிரபரணியில் கலக்க ஓடிவரும் காட்டாறு வெள்ளம்.!

நெல்லை மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலமாகும்

அதன்படி நல்ல மழை பெய்வதால் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வருகின்றன

இந்த அணைகள் தான் மூன்று மாவட்ட பாசன தேவையும் கூடுதலாக விருதுநகர் மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களில் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்கின்றன

தினமும் பகலில் மிதமான வெயில் அடிக்கிறது பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது

நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, தியாகராஜ நகர், வி எம் சத்திரம், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

Stories

More

நெல்லையில் திருடர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

நம்பிக்கை சுடரொளியாக வாழும் திருநங்கை பிரகதி!

பட்டாசு இப்படி தான் வெடிக்கனும்..!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காட்டாற்று பகுதிகளில் இருந்து ஓடிவரும் வெள்ளநீர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது

இதனால் ஆற்றில் வெள்ளம் போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன

தொடர்ந்து மழை பெய்வதால் நெல்லை மாவட்டங்களில் வருவாய்த் துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்

புருவங்களை காணிக்கை அளிக்கும் பழங்குடிகள்.!