கோடையில் குளுகுளு குளியல் போடனுமா... குற்றாலம் சீசன் தெரிஞ்சுக்கோங்க.!

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் தவித்து வந்தனர்

இந்நிலையில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது

அதனைத் தொடர்ந்து தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், இலஞ்சி, மேலகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டு நாள் கனமழை வெளுத்து வாங்கியது

இதனைத் தொடர்ந்து தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட குற்றாலம் அருவிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

குற்றாலத்தில் 11,  12ஆம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழத் துவங்கியதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது

பின்னர் தண்ணீர் வரத்துச் சீரானதும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்

மேலும், தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில் தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காகத் தென்காசிக்கு வருகை தருகின்றனர்