பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் காற்றின் வேக மாறுபாட்டால் காலையிலிருந்து உள்வாங்கி காணப்பட்ட கடலால் வெளியில் தெறிந்த சிறிய நத்தை, சிப்பிகள் நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றதால் படகுகளை இயக்க முடியாமல் மீனவர்கள் சிரமமடைந்து பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் குந்துகால் வரையிலும் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை வைத்து மீனவர்கள் கரையோரத்தில் வாழும் மீன்களை பிடித்து மீன்பிடிதொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்
இந்த பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது 200- மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டு கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகு தரைதட்டி நின்றது
இதனால் சில மீனவர் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. மேலும், கரையோரத்தில் வாழும் நத்தைகள், சிற்பிகள், நண்டுகள் அனைத்தும் வெளியில் தென்பட்டு, சில இறந்து கிடந்தன
பிற்பகல் நேரத்திற்கு பின்பு காற்றோட்டம் மாறும்போது மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும், இது காற்றின் வேக மாறுபாட்டால் அடிக்கடி நிகழும் நிகழ்வு தான் இதற்கு அச்சம் தேவையில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்