வெள்ளக்காடாக மாறிய கவுசிகா ஆற்றின் கழுகுப் பார்வை புகைப்படங்கள்.!

ஆக்கிரமிப்புகளால் ஆடு தாண்டும் ஓடையாக இருந்த கவுசிகா கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக 20 ஆண்டுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச - 17 ) பெய்த மழையில் ஆற்றின் கரையோர பகுதிகளான ஆனைக்குழாய், ஆற்றுப் பாலம் பகுதிகளில் வெள்ளநீர் ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட பாலத்தை ஒட்டியவாறு சென்றன

தற்போது அந்த பகுதியின் ட்ரோன் புகைப்படங்கள் தான் வெளியாகி, இது நம்ம கவுசிகா நதியா என்ற ஆச்சரியத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்

வறண்ட கரிசல் பூமியாக உள்ள விருதுநகரின் ஒரேயொரு ஜீவநதியாக உள்ளது கவுசிகா நதி

பொதுவாக நதியின் பிறப்பிடம் மலையாக தான் இருக்கும். ஆனால் கவுசிகாவின் பிறப்பிடம் விருதுநகர் அருகே உள்ள வடமலை குறிச்சி கண்மாய் தான்

வத்திராயிருப்பு பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளநீர் வடமலை குறிச்சி கண்மாய்களில் வந்து சேருகிறது

வடமலைக்குறிச்சி கண்மாய் நிரம்பிய பின்னர் அங்கிருந்து விருதுநகர் நோக்கி செல்லும் கவுசிகா குல்லூர்சந்தை நீர்த்தேக்கத்தை போய் சென்றடைகிறது

Stories

More

உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரபகவான் கோவில்.!

திருவள்ளுவரைப் போற்றும் பிரான்ஸ் அரசு..!

மதுரையில இப்படி ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டா..?

உள்ளூரிலேயே தொடங்கி குறைந்த தூரமே பயணிக்கும் இந்த நதியின் கழுப்பார்வை படங்கள் தான் தற்போது வெளியாகி உள்ளது

கவுசிகா நதியின் கழுப்பார்வை அழகை கண்ட பொதுமக்கள் பலர் கவுசிகா நதியை தூர்வாரி பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அரண்மனை தோற்றத்தில் காட்சியளிக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்.!