தாய்ப்பால் சுரக்க இதை சாப்பிடுங்கள்

தாய்ப்பால் சுரக்க இதை சாப்பிடுங்கள்

இரும்புச்சத்து நிறைந்த பழங்களான பேரீச்சம், அத்தி போன்றவற்றை தினமும் உண்பதால் பால் சுரப்பதோடு தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு சக்தியையும்  அதிகமாக்கும்.

பேரீச்சம்

நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும்.

நீர்ச்சத்து

பால் சுறா  மற்றும் பால் சுறா கருவாடு உண்பதால் தாய்மார்களுக்கு பால் சுரப்பது அதிகரிக்கும்.

பால் சுறா

பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி லேசாக வேகவைத்துச் சாப்பிடலாம். இதில் குழந்தைக்குத் தேவையான வைட்டமின் ‘ A’ சத்து அடங்கியுள்ளது. அத்துடன் தாய்மார்களுக்கும் பால் அதிகமாக சுரக்கும்.

பப்பாளி

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்க பால் சுரப்பு அதிகரிப்பதோடு, கருப்பையைச் சுருங்கச் செய்து கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும்.

வெந்தயம்

பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பை அதிகமாக்கி உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கும்.அத்துடன் பூண்டை தோல் நீக்கி பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் குடிக்க  தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

பூண்டு

முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம். இது தாய் மற்றும் குழந்தைக்கும் தேவையான சரிவிகித சத்துள்ள உணவாக அமையும்.

பயிர்

குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் குழந்தைக்கு பால் கொடுக்கும் போதோ அல்லது கொடுத்த பிறகோ குடிப்பதால் பால் நன்றாக சுரக்கும்.

தண்ணீர்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தாய்ப்பாலின் அளவு அதிகரிக்க தாய்மார்கள்  மார்பின் முனைகளையும், மாரபங்களையும் கசக்கிவிட்டால் இரத்த ஓட்டம் அதிகரித்து பால் சுரப்பதும் அதிகரிக்கும். எனவே குழந்தைக்கு பால் கொடுக்கும் முன்பும் மார்பகங்களை கசக்கிவிட்டுக் கொடுங்கள்.

உங்கள்  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்  7  சிறந்த பழங்கள்.!