எலான் மஸ்க் முதல் செர்ஜி பிரின் வரை... உலகின் மாபெரும் பணக்காரர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா.?

எலான் மஸ்க்

பென்சில்வேனியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற இவர், 1997ஆம் ஆண்டு தனது முதுகலை பட்டம் பெற்றார்

பெர்னார்ட் அர்னால்ட்

1971 ஆம் ஆண்டு ஃபிரான்சின் தலைசிறந்த எகோல் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் மற்றும் கணித பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்

ஜெஃப் பெசோஸ்

கணினி அறிவியலில் பொறியியல் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற ஜெஃப் பெசோஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டம் பெற்றார்

பில் கேட்ஸ்

1973 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்பு மாணவராக இருந்த இவர் பின்னர், பல்கலைக்கழகத்தின் மிகவும் கடுமையான கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்பில் பட்டம் பெற்றார்

ஸ்டீவ் பால்மர்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார், பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் பட்டம் பெற்றார்

லாரி பேஜ்

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியலில் பட்டப்படிப்பையும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார்

மார்க் ஜுக்கர்பெர்க்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் உளவியல் படித்துக் கொண்டிருந்தபோது ஃபேஸ்புக்கை உருவாக்கி பின்னர் அதை முன்னுக்கு கொண்டுவரும் முயற்சியில் கல்லூரி படிப்பை கைவிட்டார்

ஜென்சன் ஹுவாங்

ஒரிகான் மாநில பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் உயர்கல்வியை முடித்தார்

வாரன் பஃபெட்

நெப்ராஸ்கா - லிங்கன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இதையடுத்து கொலம்பியா வணிக பள்ளியில் பொருளாதாரத்தில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்

லேரி எலிசன்

சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களிலிருந்து படிப்பை பாதியில் நிறுத்தினார்

சேர்ஜி பிரின்

காலேஜ் பார்க்கில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் கணினி அறிவியலில் கௌரவ அறிவியல் பட்டம் பெற்றார்

next

கும்பகோணத்துல குட்டி ஈஷாவா… 51 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிவன் சிலை.!