வெங்காயத்தை பச்சையாக அப்படியே சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து..!

செரிமானத் தொந்தரவு

வெங்காயத்தில், ஃபிருக்டான்ஸ் என்ற ஒரு காம்பவுண்டு இருக்கிறது. இது ஒரு வகையான கார்போஹைட்ரேட் ஆகும். இது, வாயு, வயிறு உப்பசம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே, IBS போன்ற வயிறு சார்ந்த கோளாறுகள் அல்லது செரிமானப் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு, இது தீவிரமான செரிமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்லக்ஸ்

LES என்று பொதுவாக அறியப்படும் லோவர் ஈசோஃபிகள் ஸ்பின்க்டரை ரிலாக்ஸ் செய்யக் கூடிய தன்மை வெங்காயத்துக்கு உள்ளது. இதனால், வயிற்றில் இருக்கும் அமிலம், வயிற்றில் இருந்து உணவுக் குழாயில் மேற்புறமாக திரும்பும். உணவுக் குழாயில் அமிலம் இருந்தால், அது நெஞ்சுப் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும்.

வாய் துர்நாற்றம்

வெங்காயம் பச்சையாக சாப்பிடுவது எவ்வளவு சுவையாக இருந்தாலும் கூட இதில் மிகப்பெரிய நேரடியான விளைவு, வாய் துர்நாற்றம்! வெங்காயத்தில் சல்ஃபர் இருக்கிறது; எனவே இது ஒரு விதமான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் பச்சையாக வெங்காயத்தை சாப்பிட்ட பிறகு வேறு நறுமண பொருட்களை சாப்பிட்டாலும் கூட, நீண்ட நேரத்திற்கு இதனுடைய பச்சையான வாடை உங்கள் சுவாசத்தில் இருந்துகொண்டே இருக்கும்.

அலர்ஜி ஏற்படும் அபாயம்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய ஒவ்வாமை மிகவும் அரிதானது; இது எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. இருப்பினும் வெங்காயம் சாப்பிடுவதால் ஒருசிலருக்கு அரிப்பு உடல் முழுவதும் சிவந்து போகுதல் அல்லது வீக்கம், இதனால் ஏற்படக்கூடிய மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். வெங்காயத்தால் அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பிளீடிங் அபாயம்

வெங்காயத்தில் வைட்டமின் கே சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் கே இரத்தத்தை உறைய வைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே அதிக அளவில் பச்சையாக வெங்காயத்தை சாப்பிடும் பொழுது ஒரு சிலருக்கு இது பிளீடிங் சம்பந்தப்பட்ட அபாயத்தை அதிகரிக்கலாம். உதாரணமாக பிளட்-தின்னிங் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு பச்சையாக வெங்காயம் சாப்பிடுவது பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?