குந்தலப்பட்டி அருகே குகை போல மரங்கள் அடர்ந்து இருப்பதை கண்டால் விருதுநகரில் இப்படி ஒரு பசுமையான இடமா ஆச்சரியம் எழும்.
தொடர்ச்சியான நெருக்கமான மரங்கள் பசுமையான குகை போன்ற அமைப்பை கொடுக்கின்றன. உண்மையில் இந்த வழியாக வரும் வாகனங்களை பார்த்தல் நமக்கு அவை குகையில் வருவது போல தான் தெரியும்.
ஒரு காலத்தில் விருதுநகர் தொடங்கி அந்த பக்கம் வத்திராயிருப்பு வரை தொடர்ந்து இருந்த மரங்கள் இன்று மறைந்து போய் இந்த ஒரு இடத்தில் மட்டும் நினைவு சின்னமாய் பழைய தோற்றத்துடன் நிற்கின்றன.
அழகாபுரி தொடங்கி வத்திராயிருப்பு வரை மரங்கள் காணப்பட்டாலும் அவை குடியேற்றம் காரணமா அதன் இயற்கை அழகை இழந்து விட்டன. நிறைய மரங்கள் வெட்டப்பட்டதன் காரணமாக மரங்களின் இடைவெளி குறைந்து விட்டது.
இதே போன்று நகரின் மற்றொரு பகுதியான விருதுநகர் வடமலை குறிச்சி சாலையும் இதே போன்றே காட்சி தருகிறது.
விருதுநகர் அழகாபுரி சாலையை விட இங்கு வாகன வரத்து குறைவு என்பதால் இந்த வழியாக செல்பவர்கள் இங்கு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
விருதுநகரிலேயே போட்டோ ஷூட் லேகேசன் தேடுபவர்களுக்கு இந்த இடம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.