பூலோக சொர்க்கத்தை கண்முன் நிறுத்தும் சூப்பர் ஸ்பாட்... பெரிய பாலி நீர்வீழ்ச்சி பற்றி தெரியுமா.?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் போதமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த கீழூர் கிராமம். ராசிபுரத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

இங்கே இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் ஒத்தையடி பாதையாக காட்டு வழியாக சென்றால் நம் அனைவருக்கும் காண கிடைக்காத காட்சி என்று சொல்லலாம்

ஏனென்றால் கீழூர் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காட்டின் மையப் பகுதியில் இந்த பெரிய பாலி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது

இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர் போதமலையில் இருந்து நேரடியாக இந்த பெரிய பாலி நீர்வீழ்ச்சிக்கு வருகிறது

இந்த போதமலையானது கொல்லிமலைக்கு ஈடான ஒரு மலை என கூறப்படுகிறது

இங்கு மேலூர், கீழூர் மற்றும் கிடமலை எனும் மூன்று கிராமங்களில் சுமார் 1500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்

இந்த மலையில் இருந்து வரும் நீரானது கீழூர் வழியாக இந்த பெரிய பாலில் நீர்வீழ்ச்சிக்கு வந்தடைகிறது

இங்கிருந்து பட்டணம் புதுப்பட்டி வடுகம் உள்ளிட்ட கிராமங்களுக்கு விவசாயத்திற்காக பயன்படுகிறது

இந்த பெரிய பாலின் நீர்வீழ்ச்சியில் தற்பொழுது குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

விழா காலங்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் இங்கே அதிக அளவு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்கள் வந்து இந்த நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர்

நாமக்கல்லில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி நாமக்கல் மக்களுக்கு பெரிதும் வரபிரசாதம் என்று தான் சொல்லவேண்டும்

next

கடலை ரசித்த படி மீண்டும் ரயிலில் பயணிக்கலாம்.!