50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் - நிர்மலா சீதாராமன் நியூஸ்18க்கு பிரத்யேக பேட்டி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நியூஸ்18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். 

இந்த பேட்டியில் பட்ஜெட் குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதில் முக்கிய சாராம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், அதனை மாநிலங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்பது அவர்களின் முடிவு எனவும் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்

பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்; மத்திய அரசு அமல்படுத்திய திட்டங்கள் குறித்து மக்கள் பேசுகிறார்கள் எனவும், இது அவர்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதாகவும் கூறினார்.

அரசின் திட்டங்களை மக்கள் பேசுகிறார்கள்

இந்திய பொருளாதார வளர்ச்சியில் சிறிய திட்டங்கள் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 7 சதவீத வளர்ச்சி என்பது சாத்தியமான ஒன்றுதான் என பேசினார்.

சாத்தியமான 7 % வளர்ச்சி

தனியார் பங்களிப்பை மத்திய அரசு பெருமளவில் ஊக்குவிக்கிறது. புதிய துறைகளில் தனியார் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கிறோம்

சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகள் பெரும் சிக்கல்களை சந்தித்து வந்ததாகவும், மீண்டும் சிறப்பாக செயல்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என கூறியுள்ளார்.

வங்கிகள் சீரமைப்பு