வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வண்ண வண்ணமான மீன் வகைகளை கொண்ட மீன் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500 க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது
நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வருகை புரிகிறார்கள்
இந்த நிலையில் குழந்தைகளை கவரும் வகையில் பூங்கா நிர்வாகம் சார்பில் மீன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது
இந்த மீன் அருங்காட்சியகத்தில் வெளியே முகப்புமீன் வடிவில் கட்டப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது
அதன் உள்ளே சென்று பார்க்கையில்ஏறத்தாழ 28 வகையான அலங்கார மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
பார்வையாளர்கள் மீன் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து இலவசமாக மீன்களை கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது