மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. இதனால் தமிழக தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கும் இளம் வாக்காளர்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வலியுறுத்தியுள்ளது
நெல்லையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் ஏற்கனவே கல்லூரிகளில் இளம் வாக்காளர்கள் மத்தியில் கருத்தரங்கம் மற்றும் மாதிரி வாக்குப்பதிவு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன
இந்நிலையில் நெல்லை தாலுக்கா அலுவலக சுவர்கள், சித்த மருத்துவக் கல்லூரி வளாக சுவர்களில் பொதுமக்கள் இளம் வாக்காளர்கள் காணும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணி நடந்தது
நெல்லை மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகள் இந்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்
அதில் வாக்களித்தல் நம் ஜனநாயக கடமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும், பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கக் கூடாது, ஜாதி மதம் பார்த்து வாக்களிக்க கூடாது என்று வலியுறுத்தும் விதத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன
இதனை தேர்தல் தாசில்தார் பாலகிருஷ்ணன், தேர்தல் பிரிவு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்தனர். இந்தத் தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை மேலும் பல்வேறு இடங்களில் வரைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது