கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு ஆண்டு தோறும் ஆகஸ்டு 2 மற்றும் 3ம் தேதிகளில் அரசின் சார்பில் விழா நடைபெற்று வருவது வழக்கம்.
இதனையொட்டி இவ்வாண்டும் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெற்றது.
நாமக்கல்லில் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வாக தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சியை மாவட்ட சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்ட சோட்டா பீம், 25 ஆயிரம் ரோஜா மலர்களால் ஆன கங்காரு,
15 ஆயிரம் மலர்களால் ஆன இதயம் வடிவ அமைப்பு, ஆசிய ஹாக்கி சேம்பியன் அடையாளமான பொம்மை சின்னம் காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் மலர்களால் நுற்றாண்டு சின்னமும் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் ரோஜா, ஜெப்ரா, கார்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம், ஆர்கிட், லில்லியம் உள்ளிட்ட மலர்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்து மலர்களை பார்த்தவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.