தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கம் மற்றும் விழுப்புரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பம்பை உடுக்கை சிலம்பு கலைஞர்கள் நலச் சங்கத்தின் 3-ம் ஆண்டு துவக்க கலை விழா விழுப்புரத்தில் நடைபெற்றது
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பம்பை உடுக்கை சிலம்பு கலைஞரின் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி
சென்னை, தஞ்சாவூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பம்பை, உடுக்கை, சிலம்பு உள்ளிட்ட 100க்கணக்கான கலைஞர்கள் கலந்துக்கொண்டனர்
பழைய பேருந்து நிலையம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கப்பட்டது. பம்பை உடுக்கை சிலம்புடன் பல வேடங்கள் அணிந்தும், பலர் அம்மன் வேடங்கள் அணிந்தும், கைச்சிலம்பு, இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைத்தவாறும் ஊர்வலமாக சென்றனர்
நகரின் முக்கிய வீதிகள் வழியாக இசைக்கருவிகளை வாசித்து, நடனம் ஆடிச் சென்ற கலைஞர்கள் ஆஞ்சநேயர் திருமண மண்டபத்தை அடைந்தனர்
இந்த ஊர்வலம் குறித்து நாட்டுப்புறக் கலைஞர்களான வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான சட்ட வழிமுறைகள் கடுமையாக இருப்பதால்
அவற்றை எளிமையாக்கி உடனுக்குடன் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதாக மாநில தலைவர் சத்யராஜ் கூறினார்