உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதால் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, பசி உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் நாம் தவிக்க நேரிடுகிற போது, நம்முடைய முயற்சிக்கு முழு பலன் கிடைக்காமல் போகிறது.
நீண்ட நேரத்திற்கு பசியை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்.
பீன்ஸ், பசலைக்கீரை, புரக்கோலி, மற்றும் பச்சை இலை காய்கறிகள் உங்களை எப்போதும் முழுமையாக வைத்திருக்கும். இதனால் சர்க்கரை அளவை சமன் செய்து வைத்திருக்கும். அதோடு இதய ஆரோக்கியமும் மேம்படும்.
நம் உடலில் திசுக்களை கட்டமைக்கவும், பழுதடைந்த திசுக்களை மீட்டமைக்கவும் இது உதவுகிறது. மெல்லிய இறைச்சி வகைகளான கோழிக்கறி, வாத்து கறி, மீன் போன்றவற்றில் புரதச்சத்து மிகுதியாக இருக்கிறது. முட்டை அவித்து சாப்பிட்டாலும் பசி உணர்வு கட்டுப்படும்.
சாப்பிடும் போதே வயிறு நிரம்பிய உணர்வை துரிதமாக ஏற்படுத்தக்கூடிய திறன் நீர்ச்சத்துள்ள உணவுகளுக்கு உண்டு. உதாரணத்திற்கு வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்றவற்றை சாப்பிட்டால் வயிறு உடனடியாக நிரம்பி விடும், கலோரி சத்து மிகவும் குறைவாக இருக்கும்
எந்த ஒரு உணவு பொருளையும் மதிப்பு கூட்டாமல் அதன் இயற்கை வகையிலேயே எடுத்துக் கொண்டால் நமக்கு தேவையான நார்ச்சத்து, ஊட்டச்சத்து மற்றும் நீர் சத்து ஆகியவை கிடைக்கும். முழு தானியங்களாக எடுத்துக் கொள்வதால் பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும்.
நாம் சாப்பிடும் உணவில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்து ஆகியவை இருக்க வேண்டும். கீரைகள், வேகவைத்து கோழிக்கறி, கொண்டக்கடலை போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும். அதன் எதிரொலியாக நாம் குறைவான உணவு சாப்பிடும் நிலையில் உடல் எடை கட்டுப்படும்.