இந்த உணவுப் பழக்கங்கள் உங்கள் தூக்கத்தை பாதிக்குமா?

டீ - காபி 

டீ-காபி போன்ற காஃபின் கலந்த பானங்களை இரவில் குடிப்பது தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

மது பானம்

கார்போஹைட்ரேட் நிறைந்த சோடா, குளிர்பானங்கள் மற்றும் மது பானங்கள் இரவில் படுக்கும் முன் குடிப்பது  துக்கத்தின் சுழற்சியை பாதிக்கும் 

காரமான உணவுகள்

காரமான உணவுகள் அஜீரணம் மற்றும் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும், இது உங்கள் தூக்கத்தைத் தொந்தரவு செய்யலாம். படுக்கைக்கு முன் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் 

இனிப்பு உணவுகள்

இரவில் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்  மற்றும் துக்கத்தின் சுழற்சியை பாதிக்கும்

நீர் நிறைந்த  உணவுகள்

இரவில் சூப், கஞ்சி, கூழ்  போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது சிறுநீர் ஓட்டத்தை அதிகரித்து இரவு தூக்கத்தை பாதிக்கும்.

எண்ணெய் உணவுகள்

இரவில் எண்ணெய் அதிகம் உள்ள உணவை உண்பது   நெஞ்செரிச்சலை  உண்டாக்கும் மற்றும் துக்கத்தின் சுழற்சியை பாதிக்கும்

புகைபிடித்தல்

இரவு உணவிற்குப் பிறகு புகைபிடிப்பது பல்வேறு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் துக்கத்தின் சுழற்சியை பாதிக்கும்

இறைச்சி

பெரும்பாலும் கொழுப்பு நிறைந்த உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, உறங்கும் போது உங்களை விழித்திருக்கச் செய்யும்

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?