சர்க்கரை உணவுகளை அதிகம் சாப்பிடுவது கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வதற்கு வழிவகுக்கிறது. இவை கல்லீரல் கொழுப்பு நோயை மென்மேலும் மோசமாக்குகிறது
அதிக அளவு ட்ரான்ஸ் ஃபேட் கொண்ட உணவுகளை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க செய்து கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும்
உணவில் சோடியம் அளவு அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும். இது கல்லீரலுக்கும் தீங்கானதாகும்
பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் கல்லீரலுகு தீங்க விளைவிக்கும். ஏனென்றால் இவை பதப்படுத்தப்பட்ட அதிக சோடியம் நிறைந்த உணவுகளில் உள்ளடங்கும்
கிரீன் டீ எக்ஸ்ட்ராக்ட், அனபோலிக் ஸ்டெராய்டுகள் மற்றும் பல மூலபொருட்கள் அடங்கிய சப்ளிமெண்ட்ஸ் ஆகியவை கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம்
Acetaminophen பாதுகாப்பானதுதான் என்றாலும் கூட அதை தவறாகவோ அல்லது அளவிற்கு அதிகமாகவோ பயன்படுத்தினால், நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் கல்லீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும்
குளிர்பானங்களை அதிகமாக அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) வருவதறகான வாய்ப்பு அதிகம்
சர்க்கரை மிகுதியாக இருக்கும் பானங்கள் உடலில் உள்ள இரத்தத்தின் சர்க்கரை அளவை மிகுதியாக அதிகரிக்க செய்து இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும்
இங்கு வழங்கப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே; மருத்துவ ஆலோசனை இல்லை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் அவசியம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
நரம்பு வலியை குணப்படுத்தும் 5 வழிகள் இங்கே…