இரத்தத்தை சுத்தம் செய்யும் 5 உணவுகள்..!

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஆரோக்கியமான இரத்தத்தை பராமரிப்பது முக்கியம். அதற்கு நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம். மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் கொண்டு செல்வதற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது.

இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய சில சூப்பர்ஃபுட்கள் உள்ளன. அவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிப்பது பற்றி பார்ப்போம்.

கீரைகள் 

 கீரை இரும்புச்சத்து நிறைந்த உணவாகும். இரத்த சிவப்பணு உற்பத்திக்கு இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது அதனால் இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.

1

பெர்ரிகள்

ப்ளூபெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் ஆகிய பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதில் இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் நிரம்பியுள்ளது. 

2

மீன்

சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன் ஆகியவை இதய ஆரோக்கியம் நிறைந்த மீன்களாகும். ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள் நிறைந்த இந்த மீன்களானது, வீக்கம், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இதய நோய் அபாயம் ஆகியவற்றை குறைக்கின்றன.

3

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், சியா விதைகள் மற்றும் ஆளிவிதைகள் ஆகியவற்றில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஹெல்தி ஃபாட்ஸ், ஃபைபர் மற்றும் ப்ரோட்டீன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன, அதனால் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

4

பீட்ரூட்

இதிலுள்ள இரும்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்களின் கலவையானது, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அதிகரிப்பதை மேம்படுத்துவதற்கும் சுத்திகரிப்பதற்கும் உதவுகிறது.  ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கின்றது. 

5

next

கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் 5 சிறந்த உணவுகள்.!