மார்பகப் புற்றுநோயை தடுக்க உதவும்  12 உணவுகள்..!

மார்பகப் புற்றுநோயை தடுக்க உதவும்  12 உணவுகள்..!

கீரை வகைகள்

பச்சை இலைக் காய்கறிகளில் பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் உள்ளிட்ட கரோட்டினாய்டு ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் உள்ளன. இதில் இருக்கும் அதிக ரத்த உற்பத்தி அளவு மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது

கோஸ் வகை காய்கறிகள்

காலிஃபிளவர், முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

அல்லியம் வகை காய்கறிகள்

பூண்டு, வெங்காயம் போன்றவை அல்லியம் வகையைச் சேர்ந்த காய்கறிகள் ஆகும். இவற்றில் நிறைந்திருக்கும் ஆர்கனோசல்பர் கலவைகள், ஃபிளாவனாய்டு ஆண்டி-ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களில் அதிகளவு சிட்ரஸ் வேதி இருக்கின்றன. மேலும், வைட்டமின்-சி, கரோட்டினாய்ட்ஸ், ஃபிளாவனாய்ட்ஸ் போன்றவையும் இதில் அதிகளவில் காணப்படுகின்றன. இது உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை செழுமைப்படுத்தி, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வளர்க்கிறது.

பெர்ரி பழங்கள்

இதில் இருக்கும் அதிகளவு ஆண்டி-ஆக்ஸிடண்டுகள், அதனுடன் இருக்கு ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் ஆந்தோசயினின்கள் உடலில் உள்ள திசுக்களின் சிதைப்பைத் தடுக்கிறது. மேலும், புற்றுநோய் செல்கள் பரவுவதை குறைக்கிறது.

More Stories.

பார்லர் போகாமலே உங்கள் சருமத்தை டீப் க்ளீன் பண்ணலாம்...

இந்த எண்ணெய்யை சருமத்தில் அப்ளை செய்தால் மிளிரும் பொலிவு கிடைக்குமா..?

சரியான முறையில் லிப்ஸ்டிக் அப்ளை செய்வது எப்படி.!!

பீச், ஆப்பிள்கள், பேரீச்சம்பழம், திராட்சை

புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றலை வலுவாகப் பெற்றுள்ளன. ஈஸ்ட்ரோஜென் சுரப்பை கட்டுப்படுத்த இவை உதவுகிறது. பல ஆய்வுகளும் இதை உறுதி செய்துள்ளன.

மீன்

சால்மன், சார்டைன்ஸ், மேக்ரீல் போன்ற மீன் வகைகள் உடல் நலத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. இதில் அதிகளவில் காணப்படும் ஒமேகா-3 அமிலம், செலீனியம், ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

புளிக்கவைத்த உணவுகள்

புளித்த உணவுகள் வகையில் இருக்கும் தயிர், யோகர்ட் போன்றவை அதிகளவு ப்ரோ-பயாடிக்ஸை கொண்டுள்ளன. இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக தீவிரமாக செயல்படுகிறது.

பீன்ஸ்

அதிகளவு ஃபைபர், வைட்டமின், மினரல்ஸ் அடங்கியதாக பீன்ஸ் வகை உணவுகள் இருக்கின்றன. 1,260 நைஜீரிய பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இது புற்றுநோய் செல்கள் வளர்வதை 28 விழுக்காடு வரை தடுக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

மூலிகைகள் மற்றும் மசாலாக்கள்

மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களில் மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாக்க உதவும் தாவர கலவைகள் உள்ளன. வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், பாலிஃபினால் ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் இதற்கு உதவுகிறது.

தானியங்கள்

கோதுமை, அரிசி, பார்லி, கம்பு போன்ற தானிய வகைகளில் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் அடங்கியுள்ளன. பல்வேறு ஊட்டச்சத்துகளால் நிரம்பியுள்ள இவற்றில் சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வால்நட்ஸ்

இதில் இருக்கும் நல்ல கொழுப்பு உடலுக்கு நல்ல வலுவை சேர்க்கிறது. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் வால்நட்ஸில் நிறைந்துள்ளதால், இவை புற்றுநோய் எதிர்ப்பு உணவாக செயல்படுகின்றன.

இந்த 5 பொருட்களை மறந்தும் கூட உங்கள் முகத்தில் அப்ளை செய்யாதீங்க.!