சுற்றுலா பயணிகளுக்கு செம வீக் எண்ட் ட்ரீட் இது... சுருளி அருவிக்கு மீண்டும் அனுமதி.!

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது

இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து பின் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்

ஆண்டுதோறும் இந்த அருவிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது

ஆனால் கடந்த வாரத்தில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் அருவியில் நீர்வரத்து முற்றிலும் நின்று போனது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்

பின்னர் ஏற்பட்ட மழைப்பொழிவு காரணமாக அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் கூட்டமாக யானை நடமாட்டம் இருந்ததால் அருவிப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் மீண்டும் தடை விதித்திருந்தனர்

தற்போது யானைகள் காட்டுப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது. அருவிப்பகுதியில் யானைகள் நடமாட்டம் குறைந்ததன் அடிப்படையில் வாரத்தில் இரண்டாவது முறையாக சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிக்க அனுமதி அளித்துள்ளனர்

அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக அருவியில் குளித்துவிட்டு செல்கின்றனர்

next

நரம்புகள் வலுப்பெற உதவும் 5 சூப்பர் உணவுகள்.!