மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி.!

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மணிமுத்தாறு அருவி உள்ளது

மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வழியாக வந்து மணிமுத்தாறு அருவியில் கொட்டுகிறது

கடந்த சில நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டது

மேலும், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது

தற்போது பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்கச் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகம் இருந்தது

இனி வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு டாட்டா.. ரயில்வேயில் அதிரடி மாற்றங்கள்!

வாழ்நாளில் ஒருமுறை கூட தூங்காத உயிரினம் எது தெரியுமா..

நாய்கள் அதிகம் எதை விரும்புகிறது தெரியுமா?

More Stories.

ஆனால் கடந்த சில நாட்களாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அங்குச் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கன மழைக்காக அறிவிக்கப்பட்டிருந்த அலர்ட் நீக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் லேசான மழையே பெய்து வருகிறது

இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்

next

குற்றாலம் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்க போகிறதா… இன்றைய நிலை என்ன.?