வார விடுமுறையில் மாஞ்சோலை செல்ல ரெடியா இருங்க மக்களே...

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அழகான மலையாக மாஞ்சோலை உள்ளது. மாஞ்சோலையில் இயற்கை அழகு அருமையாக இருக்கும்

இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அற்புதமான களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பகுதியில் அமைந்துள்ளது

இங்குள்ள மலைகள் கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கின்றன

திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் உள்ள இந்த மாஞ்சோலை மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது

மாஞ்சோலை அதன் அழகான வானிலைக்கு புகழ் பெற்றது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்தது

இதனால் மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல கடந்த ஜூன் 28ம் தேதி முதல் வனத்துறை தடை விதித்தது

ஏசி கேஸ் கசிவு ஏன் நடக்கிறது? முன்பே தடுப்பதற்கான கைட்லைன்ஸ்...

வெயில் பற்றி கவலையில்லை... வந்தாச்சு பாக்கெட் ஏசி புதிய வெர்ஷன்!

ஃப்ரிட்ஜை ஏசியாக மாற்றி பயன்படுத்த முடியுமா..?

More Stories.

இந்நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால் மாஞ்சோலை செல்வதற்கு ஜூலை 5 முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளித்து முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “அம்பாசமுத்திரம் வனச்சரகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை குறைந்துள்ளது

இதனை தொடர்ந்து இன்று முதல் மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல தினமும் 10 வாகனங்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

next

சுற்றுலா பயணிகளுக்கு செம வீக் எண்ட் ட்ரீட் இது… சுருளி அருவிக்கு மீண்டும் அனுமதி.!