புதுச்சேரியின் வேடந்தாங்கலாக விளங்கும் ஊசுட்டேரி தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் புதுச்சேரியில் நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது
இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாட்டில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கத்திற்காக வந்து செல்கின்றன
குறிப்பாக பிளமிங்கோ, பெலிக்கான் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. இதுதவிர 230 வகையான பறவைகள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன
இங்கு வசிக்கும் பறவைகள் சிறு விலங்குகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக ரூபாய் 86 லட்சம் செலவில் ஊசுடு கருத்துக்காட்சி மையம் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட உள்ளது
இந்த கருத்து காட்சி மையத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் கெரோ சிமெண்ட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பறவைகளும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது
ஊசுடு ஏரியின் இயற்கை அழகினை நம் கண் முன்னே தத்துரூபமாக கொண்டு வரும் வகையில் இந்த பணிகள் நடந்துள்ளது
இந்த கருத்து காட்சி மையத்தில் சேர்க்கையாக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் உருவங்கள் பறவைகளின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளது
அங்கேயே ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் குறித்து வீடியோ 20 நிமிட படமும் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுகிறது
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 5 வீரர்கள்.!