சதுரகிரி மலையேறத் தடை... இறுதி நேரத்தில் வனத்துறை வெளியிட்ட அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி.!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குப் பக்தர்கள் வந்து செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்

சித்தர்களின் பூமி என்று சொல்லப்படும் இந்த மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது

இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்குக் கடந்த 2015ஆம் ஆண்டு வரை பக்தர்கள் எவ்விதத் தடையும் இன்றி சென்று வந்த நிலையில்,

பாதுகாப்பு கருதி பக்தர்கள் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது

அதன்படி ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது

ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மலையடிவார தாணிப்பாறை பகுதியில் உள்ள நீரோடைகளில் நீர் வரத்து அதிகமாக இருப்பதாலும்,

மேலும் தொடர்ந்து கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பக்தர்கள் மலையேற வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேற வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது

next

ஈசனும் பெருமாளும் ஒரே அறையில்… பாண்டியர் கால அதிசய குடைவரை கோயில்.!