தமிழ்நாடு அரசாங்கம் பெண்களுக்கென பல சலுகைகள் ஊக்கத்தொகை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் கீழ் பெண்கள் பல திட்டங்களில் பயனடைந்து வருகிறார்கள்
அந்தவகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத் திட்டத்தின் கீழ், ரிவார்ட் சொசைட்டி நிறுவனத்தின் மூலம், அழகு கலை பயிற்சி வகுப்புகள், தையல் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடைபெற்று வருகிறது
இத்திட்டம் குறித்து ரிவார்ட் சொசைட்டி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா கூறுகையில், இந்த திட்டத்தில் அனைத்து பிரிவு மகளிர்களும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
பத்தாம் வகுப்பு முதல் அனைத்து டிகிரி முடித்த பெண்களும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஒரு வகுப்புக்கு 30 நபர்கள் தேர்வு செய்யப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு சிறப்பு சலுகையாக 55 நாட்களுக்கு 100 ரூபாய் விகிதம்பயணப்படி 5500 ரூபாய் வழங்கப்படுகிறது
மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் முடிந்த பிறகு அவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வேலை வாய்ப்பு வாங்கி தருகிறார்கள்
தற்போது இந்த பயிற்சி வகுப்பில் விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்து பெண்கள் ஆர்வமாக பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள்
இந்த பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு அடுத்த பேட்ச் பயிற்சி வகுப்பிற்கு பெண்கள் சேர விரும்பினால், அவர்களுடைய ஆதார் கார்டு, மாற்று சான்றிதழ், பேங்க் புக்,போட்டோ போன்ற ஆவணங்களை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள,
ரிவார்ட் சொசைட்டி, நெ.4/450, இந்திரா பிரியதர்ஷினி நகர், திருச்சி மெயின் ரோடு, சாலாமேடு, விழுப்புரம்-605401, தொலைபேசி: 8072260154 என்ற முகவரிக்கு நேரில் சென்று தங்களுடைய ஆவணங்களை சமர்ப்பித்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம் என சுதா தெரிவித்தார்
மேலும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சிந்து கூறுகையில், இந்த பயிற்சி வகுப்புகள் அனைத்து பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது
வீட்டில் இருக்கும் பெண்கள் இதுபோன்று இலவசமாக நடத்தும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேறலாம் எனவும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கலாம் எனவும்,
அழகுக்கலை பயிற்சி 55 நாட்கள் தினந்தோறும் காலை 9:30 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படுகிறது.இப்பயிற்சியில் என்னை போன்று பல பெண்கள்கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.