கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 9 பழங்கள்!

நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடல்நலப் பிரச்சனைகளை சமாளிப்பதற்கும் பழங்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த வழியாகும்

அந்த வகையில் சில பழங்கள் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க பெரிதும் உதவும். எந்தெந்த பழங்கள் என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து பாருங்கள்

ஆப்பிள்

வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளதால் இவை கொழுப்பைக் கறைக்க உதவுகிறது

1

டிராகன் பழம் 

இதில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது

2

திராட்சை

ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதனால் கெட்ட கொழுப்பை கறைக்க சிறந்த ஆதாரமாக உள்ளது

3

அவகாடோ

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலான LDL-இன் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலான HDL-இன் அளவை அதிகரிக்கின்றது. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது

4

பெர்ரீஸ்

ருசியான ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிட நினைப்பவர்களுக்கு பெர்ரீஸ் ஒரு சிறந்த உணவாகும். அவ்வபோது பெர்ரிக்களை சாப்பிட்டு வருவது கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

5

வாழைப்பழம்

பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் வாழைப்பழம் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்கிறது

6

அன்னாசிப்பழம்

இது ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதனால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது

7

பேரிக்காய்

பெக்டின் வடிவில் இயற்கையான நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இவை கொலஸ்ட்ராலின் அளவை கணிசமாக குறைக்கிறது

8

பிளம்ஸ்

பிளம்ஸ் சாப்பிடுவது கல்லீரலில் கொழுப்பு உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஏனெனில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

9

next

வாழைத்தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!