ஊரப்பாக்கம் ஊராட்சியில் மலை போல் குவிந்த குப்பைகள்.. மக்கள் கடும் அவதி.!

சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கத்தில் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அருகே பல கடைகள், உணவகம், பள்ளிகள், மருத்துவமனை, அரசு மதுபான கடை உள்ள பகுதியில் பல மாதங்களாக குப்பைகளை அகற்றாமல் உள்ளனர்

ஊரப்பாக்கத்தில் இருந்து காரணை புதுச்சேரி செல்லும் சாலை அருகே இறைச்சி கழிவுகள், அனைத்து வகையான குப்பைகளை பல மாதங்களாக கொட்டி வருகின்றனர்

கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் குப்பைகளில் இருந்து வெளிவரும் கழிவு நீர் கடைகள், குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் கொசுகள் அதிகமாக உற்பத்தியாகின்றது

மாடுகள், நாய்கள், காக்கை என இந்த ஊரப்பாக்கம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகின்றது

குடியிருப்புகள் மத்தியில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற கோரி பல முறை ஆர்பாட்டம் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பல முறை மனு கொடுத்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டுகின்றனர்

இந்த குப்பை கிடங்கை கடந்து தான் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் துர்நாற்றம் வீசுவதால் தங்களின் முகத்தை மூடியபடி கடந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது

Stories

More

உதகை சாலைகளில் கொப்பளிக்கும் கழிவு நீர்..

அஷோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் போட்டோ ஷூட் நடத்திய சூப்பர் ஸ்பாட் இது தான்..

இந்த விநாயகர் சிலையின் விலை ரூ.11 லட்சமா.?

இது மட்டும் இல்லாமல் குப்பைகள் சாலையில் உள்ளதால் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி காலையிலும், மாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது

இதே நிலை நீடித்தல் ஊரப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பலவகையாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

எனவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பை கிடங்கை உடன் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

பெரிய கோயிலில் மேலும் ஒரு பிரமாண்டம்..! நாட்டியம் ஆடிய 1038 கலைஞர்கள்.!