அதிரடியாக உயர்ந்த பூண்டு விலை...  ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பூண்டு மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது

உணவிற்கு சுவையும், மனமும் சேர்க்க கூடிய பூண்டின் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது

விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ பூண்டின் விலை குறைந்தபட்சம் ரூ.260 முதல் அதிகபட்சமாக ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது

இதுவே சில்லரை விற்பனைக் கடைகளில் ரூ.280 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது

ஒரே மாதத்தில் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்

கடந்த மாதம் ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய ரக பூண்டின் விலை தற்போது ரூ.260 முதல் ரூ.280 வரையிலும், ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட மலை பூண்டின் விலை தற்போது ரூ.400 முதல் ரூ.450 வரையிலும் உயர்ந்துள்ளது

வழக்கமாக ஒரு கிலோ பூண்டு வாங்குபவர்கள், தற்போது இந்த கடும் விலை உயர்வு காரணமாக கால் கிலோ, 100 கிராம் மட்டுமே பூண்டுகளை வாங்கி செல்கின்றனர்

இதனால் பூண்டு விற்பனை மந்தமாகி வியாபாரம் பாதிக்கப்படுவதால் வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்

மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருந்து வழக்கமாக தமிழகத்திற்கு வர வேண்டிய பூண்டின் வரத்து பெருமளவு குறைந்துள்ளதே இந்த கடும் விலை உயர்விற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்

இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் பூண்டின் விலை 600 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த கடும் விலை உயர்வை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு வர வேண்டிய பூண்டு வரத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தற்போது காய்கறி விலை அதிகரிப்பு மற்றும் பூண்டின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்

next

உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 8 உணவுகள்.!