கீரை விதைகள் வைத்து வரையப்பட்ட பிரம்மாண்ட ஓவியம்... எதற்கு தெரியுமா.?

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்களிப்பது குறித்த பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதுச்சேரி தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில் புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “புதுச்சேரி நிலையான தேர்தல் லோகோ” மெகா சைசில் மாதிரி வரைபடம் வரைதல் நிகழ்ச்சி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கப்பட்டது

240 அடி நீளம் 136 அடி அகலம் கொண்ட இந்த மாதிரி லோகோ 32,640 சதுர அடியில் வரையப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் 10 கிலோ எடை கொண்ட அரைகீரை, சிறுகீரை விதைகள் விதைக்கப்பட்டது

கடந்த 6 நாட்களாக தண்ணீர் தெளிக்கப்பட்டு விதைகள் சிறுசிறு செடிகளாக முளைத்து வந்துள்ள நிலையில் 750 கிலோ கோலமாவு கொண்டு மாதிரி லோகோ வரைபடத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் இந்த பணிகள் நிறைவடைந்தது

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

இந்த வரைபடத்தினை தனியார் பள்ளி 9-ஆம்வகுப்பு மாணவிகள் சஜிதா மற்றும் பவித்ரா ஆகியோர் முழுவீச்சில் செய்தனர். இந்த வரைபடம் உலக சாதனை நிகழ்ச்சி புத்தகத்திலும் இடம் பெற உள்ளது

இதற்கான ஏற்பாடுகளை விழிகள் அறக்கட்டளை நிறுவனர் பிரேம்குமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் செய்திருந்தனர்