திருப்பூரில் 2 லட்சம் சதுர அடியில் பின்னலாடை துறை சார்ந்த அனைத்து வகையான இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்படக்கூடிய நிட் டெக் 2024 (Knit-Tech 2024) எனப்படும் இயந்திர கண்காட்சி மார்ச் 1-ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாக இந்திய பின்னலாடை சங்கம் தெரிவித்துள்ளது
இந்த கண்காட்சியில் பின்னலாடை துறை சார்ந்த அனைத்து வகையான இயந்திரங்களும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறான நவீன இயந்திரங்கள் என பல்வேறு வகையான இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது
சுமார் 2 லட்சம் சதுர அடியில் 325 ஸ்டால்களில் ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் , சீனா , சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் இயந்திரங்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்
சுமார்,ரூ. 500 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், 200 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தக விசாரணை நடைபெறும் எனவும்,
திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கும், அதன் வளர்ச்சிக்கும் நிட் டெக் 2024 இயந்திர கண்காட்சி உறுதுணையாக இருக்கும் என கண்காட்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்