விருதுநகர் கல்லூரி சாலையில் அக்டோபர் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தனியார் அமைப்புகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது
போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி say no to drugs என்ற வாசகத்தை அடிப்படையாக கொண்டு காலை 7 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வில் விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்
வாரம் முழுவதும் வேலை, வேலை என ஓடிக்கொண்டிருக்கும் மக்களை உற்சாக படுத்த தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது
இதுவரை பெருநகரங்களான சென்னை, கோவை போன்ற ஊர்களில் மட்டுமே நடந்து வந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி முதல்முறையாக விருதுநகரில் நடத்தப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காலை 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடைபெற இருந்த நிகழ்ச்சி, எதிர்பார்த்த அளவினை கூட கூட்டம் சேர்ந்து கொண்டதால் 1 மணி நேரம் முன்னதாகவே முடித்து கொள்ளப்பட்டது
இதனால் சற்று ஏமாற்றம் அடைந்தாலும் விருதுநகரில் முதல் முறையாக நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு வரவேற்பு அளித்துள்ளனர்