பிரதமராக இருந்தும், தேசிய கொடியை ஏற்றாதவர் யார் தெரியுமா.?

இந்திய நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று மூவர்ண கொடியை ஏற்றினார்

இந்திய பிரதமராக இருந்தும், இதுவரை தேசிய கொடியை ஏற்றாத ஒரே பிரதமர் யார் என்று உங்களுக்கு தெரியுமா.?

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து வந்த பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, பதவியை இழந்தார் வி.பி.சிங்

இதையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் பதவியை ஏற்றார் சந்திரசேகர்

1990ஆம் ஆண்டு நவ.10ஆம் தேதி பிரதமராக பதவியேற்று, 1991 ஜூன் 21ஆம் தேதி வரை பிரதமர் பதவியில் இருந்தார்

இதனால் பிரதமர் பதவியில் இருந்தும், ஒரு முறைகூட செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றமுடியாத பிரதமர் என்ற பெயருக்கு சொந்தக்காரரானார் சந்திரசேகர்

நேரு உயிரிழந்த பிறகும், லால் பகதூர் சாஸ்திரி உயிரிழந்த பிறகும், இடைக்கால பிரதமராக பதவியேற்றார் குல்சாரி லால் நந்தா

மொத்தமாகவே 28 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தார் இவர். இடைக்கால பிரதமராக இருந்ததால் இவர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், இவரும் தேசிய கொடியை ஏற்றாத பிரதமர் தான்

next

இந்தியா போன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடும் 5 நாடுகள்.!