தினமும் துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

துளசி பல நூற்றாண்டுகளாக புனித செடியாக இந்துக்கள் காலாச்சாரத்திலும் சிறந்த ஆயூர்வேத மூலிகையாக போற்றப்படுகிறது. 

துளசி இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு அதனின் மருத்துவ பாரம்பரியமே காரணமாகும்.

துளசியில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வைட்டமின் சி, யூஜெனால் உள்ளிட்ட நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல பண்புகள் அடங்கியுள்ளது. இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

துளசியில் இயற்கையாகவே அடங்கியுள்ள டையூரிடிக் பண்புகள் நச்சுக்கள் மற்றும் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற உதவுகின்றன. இது சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் தெளிவான சருமத்திற்கு வழிவகுக்கிறது.

வெறும் வயிற்றில் துளசியை சாப்பிடுவது செரிமான நொதி உற்பத்தியை தூண்டி, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தி, குடல் அழற்சியை தனிப்பதன் மூலம் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

துளசி கார்டிசோலின் அளவை ஒழுங்குபடுத்துகிறது இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தையும் குறைத்து மனநிலையை மேம்படுத்தி அமைதியான உணர்வை ஊக்குவிக்கிறது.

துளசியில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால் இருமல், சளி, ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றது.

துளசியில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பலனளிக்கிறது.

next

தினமும் காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!