கொத்தமல்லி விதைகளை கொதிக்க வைத்த நீரை பருகினால் இந்த பிரச்சனைகளே இருக்காதா.?

கொத்தமல்லி விதை தண்ணீர் குடிப்பதை நாம் தினசரி பழக்கமாக்கிக்கொண்டால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்

குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, மினரல் சத்துக்களின் பூர்த்தியை சரி செய்வது என பொதுவான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது

அதுமட்டுமன்றி செரிமான அமைப்பை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டி வைத்தல், அழற்சி எதிர்ப்பு திறனை அதிகரித்தல், சருமத்தை பாதுகாத்தல் என எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது

கொத்தமல்லி விதை தண்ணீர் குடிப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி அடுத்தடுத்த ஸ்லைடில் காணலாம்

1

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதன் மிக முக்கிய நன்மைகளில் ஒன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் தான். இதனால் அதிக நோய் தாக்குதல்களிலிருந்து உங்களை பாதுகாக்கும். எந்த நோயும் நெருங்காது

2

செரிமானத்திற்கு நல்லது

உங்களுக்கு செரிமான அமைப்பில் கோளாறு உள்ளது அல்லது செரிமானமடைவதில் தாமதம் எனில் அதற்கு கொத்தமல்லி விதை ஊற வைத்த நீரை பருகலாம். இதனால் செரிமான மண்டலத்தை தூண்டி செரிமான அமிலம் சுரந்து உடனே உங்களின் செரிமான வேலைகள் நடைபெறும்

More Stories

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சமையலறை பொருட்கள்.!

வேர்க்கடலை சாப்பிடுவதால் உண்டாகும் அலர்ஜியால் உயிருக்கே ஆபத்தாகுமா.?

உடல் எடையை குறைக்க 7 நாட்களுக்கான டயட் பிளான் பட்டியல்.!

Tooltip
Tooltip
Tooltip

3

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

தினமும் காலை வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிக்கிறீர்கள் எனில் சர்க்கரை அளவில் மாற்றம் இருக்கும். இது இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது

4

நோய் அழற்சி எதிர்ப்பு

உடலின் வீக்கம் மற்றும் வலிகளுக்கு கொத்தமல்லி விதை நீர் சிறந்தது. இது எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு உதவுகிறது. அதோடு நோய் அழற்சி எதிர்ப்பு தன்மை குறைவாக இருந்தாலும் கொத்தமல்லி விதை நீர் அதை தடுக்க உதவுகிறது

5

தலைமுடிக்கு நல்லது

கொத்தமல்லி விதை நீரில் விட்டமின் கே, சி மற்றும் ஏ உள்ளன. இதனால் முடி வளர்ச்சி வேகமாக இருக்கும். உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை இருந்தாலும் சரியாகும். முடி உடைதல், முடி வறட்சி போன்ற பிரச்சனைகளுக்கும் பலன் கிடைக்கும்.

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும்  5 நன்மைகள்.!